ஓங்கி குரலெழுப்புகிறாய்
அதிகாரமற்றவருனோ
வறியவனோ
உன்னிடத்தில் சிக்கும்போது
ஓங்கி குரலெழுப்புகிறாய்
உனது வார்த்தைகள்
அவனை வெட்டி வீழ்த்தி
சமாதி ஆக்குகின்றன
நீ இப்படி
ஓங்கி குரலெழுப்ப
எப்படி கற்றுக் கொண்டாய்
என்று
உனக்கு தெரியுமோ
என்னவோ
ஆனால்...........
நானும் கற்றுக் கொண்டேன்
ஓங்கி குரலெழுப்ப................
வறுமையற்ற
ஓர் உலகத்திற்காகவும்
சமத்துவத்திற்காகவும்
ஓங்கி குரலெழுப்ப
நானும் கற்றுக் கொண்டேன்
இப்பொழுது நீ தெரிந்திருப்பாய்
நீ யார் என்று
உனது வார்த்தைகள் யாருடையதென்று?
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment